85 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்று விட்டான் குழந்தை சுர்ஜித்: மீட்புக்குழுவினர் தீவிரம்

திருச்சி: 85 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு குழந்தை சுர்ஜித் சென்று விட்டாதாக கூறப்படுகிறது. திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித்(2) மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித்(2) மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

பயன்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: