ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு: தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த புல்வாமா, குப்வாரா, கார்கில் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில மாதங்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், அங்கு பதற்றமான சூழலே இதுவரை நிகழ்த்து வருகிறது. காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு புல்வாமா தாக்குதலை நடத்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ மத்திய அரசு செய்து செய்தது.

மேலும், ஜம்மனு காஷ்மீர் மாநிலத்தை  3 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 31ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் ஆகியவை முடக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக தான் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றனர். அதே சமயம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல, தீவிரவாத ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் நான்கு முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். நேற்று சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருவர் மரணமடைந்தனர். இதுபோன்று பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

Related Stories: