அரியானா தேர்தலில் தொடர் இழுப்பறி: இறுதி எண்கள் வெளியான பின்னரே கூட்டணி குறித்து முடிவு...துஷ்யந்த் சவுதலா பேட்டி

சண்டிகர்: தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு  இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169  வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி  தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும்  பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 12 இடங்களிலும் முன்னிலை  வகித்து வருகின்றன.துஷ்யந்த் சவுதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது பெரிய கட்சியாக  ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுக்கும் சூழல் உள்ளதால் துஷ்யந்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபந்திர ஹூடா, துஷ்யந்த் சவுதாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசிதயதாகவும் இன்று மாலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி, அரியானாவில் கூட்டணி  ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாகவும், துஷ்யந்த் சவுதலா முதல்வராக பதிவியேற்க வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டிளித்த துஷ்யந்த் சவுதலா, காங்கிரஸ் தனக்கு முதல்வர் பதவியை வழங்குவதாக வெளியான தகவல்கள்  குறித்து விளக்கம் அளித்தார். நான் யாருடனும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இறுதி எண்கள் வெளியாகிய பின்னரே முடிவு எடுக்கப்படும்  என்றார்.

Related Stories: