தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தில் இந்தியா...உலக வங்கி அறிக்கை

வாஷிங்டன்: தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா, 63வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக வங்கியின் சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எளிதாக தொழில் செய்வதற்கு வாய்யுள்ள நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 190 நாடுகளைக் கணக்கிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 77-வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் காரணமாக தனியார் துறைகள் உத்வேகம் அடைந்தன. வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் காரணமாக தனியார் துறைகள் உத்வேகம் அடைந்தன. வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் இந்த அறிக்கையில் முதல் 50 இடத்துக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற போது தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 190 நாடுகளில் 142வது இடத்தில் இந்தியா இருந்தது. 2017ஆம் ஆண்டில் 130வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, 2018ல் 100வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. மொத்த நாடுகளில் அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் 3.5 சதவீதத்துடன் இந்தியா 9-வது இடத்தைப் பெற்றுள்ளது. 7.7 சதவீதம் முன்னேற்றம் அடைந்து சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

5.6 சதவீதம் முன்னேற்றம் அடைந்து பாகிஸ்தான் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. தொழில்துறை சார்பாக குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைச் செய்ததன் மூலம், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ளது என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: