தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில்  காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி  சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர்  போட்டியிட்டனர்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23  பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.  தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு   இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  இதனையடுத்து, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி  வருகின்றன.

தற்போதைய நிலவரம்:

நாங்குநேரி தொகுதி: அதிமுக முன்னிலை

அதிமுக வேட்பாளர் நாராயணன்: 9327 வாக்குகள் (2,974 வாக்குகள் வித்தியாசம்)

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்: 6353 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன்: 127 வாக்குகள்

விக்கிரவாண்டி தொகுதி: அதிமுக முன்னிலை

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 33,401 வாக்குகள் (12,872 வாக்குகள் வித்தியாசம்)

திமுக வேட்பாளர் நா.புகழேந்தி: 20,529 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி: 832 வாக்குகள்

Related Stories: