இரு மாநில சட்டமன்ற தேர்தல்: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி...மகிழ்ச்சியில் தொண்டர்கள்

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில்  இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 288  தொகுதிகள் கொண்ட  மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜ-சிவசேனா ஒரு அணியாகவும், நவநிர்மான் சேனா, வஞ்சித்பகுஜன்  அகாடி, பகுஜன் சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. இத்தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி  முன்னிலை வகித்தது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்களில் பெற்றி பெற வேண்டும். இந்நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணி 183 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.  இதனையடுத்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: