தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு : 24 மணி நேரமும் உஷார் நிலையில் தீயணைப்பு துறை

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க 24 மணி நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5,728 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை உள்ள சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற  மாநகரங்களில் தீயணைப்பு வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகரரில் 39 தீயணைப்பு நிலையங்கள் உட்பட 61 இடஙகளில் தீயணைப்பு வாகனங்களுடன் 1000த்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து விழுப்புடன் பாதுகாப்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருமாறு:

* நீதிமன்றம் உத்தரவின்படியும் மற்றம் தமிழக அரசு அறிவிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

* வழிப்பாட்டு தளங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், எரிவாயு குடோன் மற்றும் குடிசைப்பகுதிகள்  ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

* பட்டாசுகளை முறையாக தீ உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்க வேண்டும்.

* பட்டாசு பெட்டியில்  அச்சடிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனமுடன் படித்து பார்க்க வேண்டும்.

* பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமாக பருத்தி ஆடைகள், பாதுகாப்புக்கு காலணிகள்  அணிந்து கொள்ள வேண்டும்.

* பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பக்கத்தில் பாதுகாப்பிற்கு வைத்து கொள்ள  வேண்டும்.

* பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

* திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்.

* ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஐன்னல் அல்லது கதவு போன்றவை மூடப்பட்டுள்ளதாக என்று உறுதிப்படுத்திக் கொள்ள ேவண்டும்.

* நீண்ட ஊதுவர்த்திகளை கொண்ட பட்டாசுகளை வெடியுங்கள் அவ்வாறு செய்யும் பொழுது முகத்தினை பாதுகாப்பாக  வேறுபக்கம் திருப்பிக் கொள்ள  வேண்டும்.

* ஆடையில் தீ பற்றினால் ஓடாதீர்கள், உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் நின்று கீழே படுத்து உருளுங்கள்.

* எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ அழுத்திட வேண்டும்.

இந்த அறிவுரைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்குமாறும் பட்டாசு வெடிக்கும் பொழுது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகள் மனதில் கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் ‘விபத்துல்லாத மற்றும் பாதுகாப்பான’ தீபாவளி கொண்டாட்டத்திற்கு நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தீ விபத்தின் போது தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

அவசர கால உதவிய எண் 101, மற்றும் 044-28554309, 28554311, 28554313, 28554314, 28554316, 28554317 மற்றும் உதவி மாவட்ட அலவலர்கள் மற்றும் நிலைய அலுவலர் செல்போன் எண்கள் 9445086081, 9445086082, 9445086083, 9445086085 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: