நிறைவடைந்தது கீழடி 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி: உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று முடிந்துள்ள 5 கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள  பொருட்களை மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. கீழடியிலேயே இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச அளவிலான அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது தற்காலிகமாக மதுரையில் இருக்கக்கூடிய உலக தமிழ்சங்க கட்டிட வளாகத்தில் கீழடியில் 5 கட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழடியில் அமையவுள்ள அருங்காட்சிய பணிகள் முடியும் வரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்பட இருக்கக்கூடிய அருங்காட்சியகம் என்பது தொடர்ந்து செயல்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தற்பொழுது உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு மூன்று அறைகள் அதற்காக ஒதுக்கப்பட்டு 12 அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் அனைவருமே தவறாமல் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: