சபரிமலை செல்லும் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்: இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளன்று ஐயப்பனுக்கு மாலை போட்டு 41 நாட்கள் வரை விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வது பக்தர்களின் வழக்கம். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்தும்  செல்லுகின்றன.

இந்நிலையில், அறநிலையத்துறை முதன்மை செயலாளர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், சபரிமலையில் உள்ள நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்தகவலை பகிர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கேரள அரசு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.  

எனவே, வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் சமரிமலை ஐயப்ப கோவிலில் நடைதிறக்கப்பட உள்ளதால், அங்கு செல்லும் தமிழக பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் எனவும், பக்தர்கள் உடுத்தி செல்லும் ஆடைகளை பம்பை நதியில் களைவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: