ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை : இன்று சவரன் ரூ.88 உயர்ந்து ரூ.29,304க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,304க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,663க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் நிலவி வருகிறது.

 கண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,304க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,663க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49,10க்கும், கிலோ ரூ.49,100க்கும் விற்பனையாகி வந்தது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: