கைதி படத்தை இணையத்தில் வெளியிட தடை

சென்னை:  இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வரும் தீபாவளி நாளன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத  இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Advertising
Advertising

Related Stories: