ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை

சென்னை: தீபாவளி தடையை மீறி பட்டாசு கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் மாதிரி பட்டாசுக்களை வைத்து நேற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் பட்டாசுக்களை கொண்டு செல்ல கூடாது .இதை மீறி ரயில்களில் பட்டாசுக்களை பயணிகள் கொண்டு சென்றால் ரயில்வே சட்டம் 164ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>