திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காதது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த  உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கலெக்டரின் நடவடிக்கைகள் கைவிட வலியுறுத்தியும், பிடிஓக்களுக்கு எச்சரிக்கை  விடுத்து வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிடிஓ அலுவலகங்களில் பணிபுரியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.2 நாளில் 2000 பேருக்கு ஒதுக்கீடு: இதற்கிடையே திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்ட எச்சரிக்கை எதிரொலியாக, இரண்டு நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு வீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள்  முடித்துள்ளனர். அதையொட்டி, அதிகாரிகளுக்கு கலெக்டர் ‘வாழ்த்து மெசேஜ்’ அனுப்பியுள்ளார்.

Related Stories: