கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரூ.18.50 லட்சம் செலவில் வீடு வழங்கினார் நடிகர் ரஜினி

சென்னை: கஜா புயல் காரணமாக வீடு இழந்தவர்களில் 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடு கட்டி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக புதுக்கோட்டை, நாகை மற்றும் திருவள்ளுர் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உள்ள நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள தலைநாயரு, கோரியக்காடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டி தரப்படும் என நடிகர் ரஜினி தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது.

தற்போது முற்றிலுமாக வீடு கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், போயஸ்கார்டனில் உள்ள ரஜினி இல்லத்தில் ரஜினி அவர்கள் அவருடைய கைகளால் கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளின் சாவியை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குத்துவிளக்கும் கொடுத்துள்ளார். இது போன்ற முக்கிய பாதிக்கப்பட்ட இடங்களான நாகை மாவட்டத்தில் உள்ள 10 குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 10 வீடுகளுக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வீட்டின் உரிமையாளர்களுக்கு சாவியை ரஜினி வழங்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாவது, கஜா புயலால் வீடுகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு வீடு கட்டி கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்து அவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கும் உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: