நாங்குநேரி தொகுதியில் வடுகச்சிமதில் என்ற இடத்தில் 3-வது முறையாக வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: வாக்காளர்கள் தவிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் வடுகச்சிமதில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 முறை வாக்குப்திவு இயந்திரங்கள் பழுதானதால் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் தவித்து வருகின்றனர். 91-ம் நெம்பர் வாக்குசாவடியில் 3 முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயந்திரம் ஒன்று பழுது ஆனதால், 235-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் பழுது அடைந்த இயந்திரத்தை அதிகாரிகள் சரிசெய்த பின்பு மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் 2 முறை வாக்கு இயந்திரம் பழுதான நிலையில் தற்போதும் பழுதாகி வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: