டூவீலர் ஏற்றுமதி சிறிது உயர்வு உள்நாட்டு விற்பனை சரிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் டூவீலர் ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை 16.18 சதவீதம் சரிந்துள்ளது.  இந்திய பொருளாதார மந்த நிலையால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. டீலர்கள், உதிரி பாக உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆறுதல் விஷயமாக, ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் என அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 17,93,957 டூவீலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 17,23,280 ஆக இருந்தது. ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி உயர்ந்தாலும், மொபெட் ஏற்றுமதி 44.41 சதவீதம் சரிந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி 6.81 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

இதில் பஜாஜ் நிறுவனம் அதிகபட்சமாக 9,34,581 டூவடீலர்கள் ஏற்றுமதி செய்து முதல் இடத்தில ்உள்ளது. இதற்கு அடுத்து டிவிஎஸ் மோட்டார் உள்ளது  ஆனால், இதே காலக்கட்டத்தில் டூவீலர் விற்பனை உள்நாட்டுசந்தையில் 16.18 சதவீதம் சரிந்து,  96,96,733 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,15,68,498 ஆக இருந்தது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

Related Stories: