நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும் , தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 4.64% அதிகரிப்பு

சென்னை : நாட்டில் பொருளாதாரம் மந்தநிலை நிலவினாலும் தமிழகத்தின் நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 4.64% என்ற சீரான வளர்ச்சியை கண்டுள்ளது.இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியின் வருவாய் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய்  91,916 கோடி என கூறப்படுகிறது. இது கடந்த 19 மாதங்களில் மிகவும் குறைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் என கணக்கிடப்படுகிறது.மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரை விட 2.67 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது

எனினும் தமிழகத்தின் நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 4.64% என்ற சீரான வளர்ச்சியை கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய இழப்பீட்டை கணக்கில் கொள்ளாமல் வரி வசூல், ரூ.42,765.12 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.அதே நேரம் இழப்பீட்டு தொகை சேர்க்கப்பட்டால் மொத்த வரி வசூல் ரூ.47,963.12 கோடி அதிகரித்து 16.49% வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.42,765.12 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 40 ஆயிரத்து 867 கோடியாக இருந்தது.

Related Stories: