நீரவ் மோடி காவல் நீட்டிப்பு

லண்டன்: பஞ்சாப்  நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.11,400 கோடி கடன் வாங்கி மோசடி  செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் 11ம் தேதி ஸ்காட்லாந்து போலீசார்  கைது செய்து தென்-மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின் போது, அவர் காணொளி காட்சி மூலம் சிறையில் இருந்தபடி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருடைய நீதிமன்ற காவலை நவம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், ``நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு  விசாரணை, அடுத்தாண்டு மே மாதம் 11  முதல் 15ம் தேதி வரை 5 நாட்கள் திட்டமிட்டப்படி நடைபெறும்’’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: