ஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்

டோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல்

புஜிசவா: கனமழை மற்றும் சூறாவளியுடன், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை நேற்று தாக்கியது ஹஜிபிஸ் புயல். அதற்கு முன் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. ‘ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப்புற பகுதியான குன்மா, சைதமா, கங்கவா, மியாகி மற்றும் புகுஷிமா ஆகியவற்றை ஹஜிபிஸ் என பெயரிடப்பட்ட புயல் நேற்று தாக்கும். அப்போது சூறாவளி காற்றுடன், கனமழை பெய்யும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக தீவிரமான மழை பெய்யும்,’ என ஜப்பான வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜப்பானின் ஷிசோகா என்ற பகுதியில் ஹஜிபிஸ் புயல் நேற்று கரையை கடப்பதற்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகள் பதிவாகியது. ஷிபா கடற்கரை பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. கடலின் மிக ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால், அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஜப்பானின் வடமேற்கு பகுதியை நோக்கி மணிக்கு 144 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், டோக்கியோ நகரை நேற்று மணிக்கு 35 கி.மீ வேகத்தில் கடந்தது. இதனால் ஷிசோகா, மீ மற்றும் தென்மேற்கு டோக்கியோவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இயல்பு வாழ்க்கை முடங்கியது

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் 14 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அத்துடன் 3 லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஹகிபிஸ் புயால் பாதிப்பு காரணமாக ரக்பி உலக கோப்பை போட்டியில் 3 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் தாக்கியல் ஜப்பானின் ஹோன்சு தீவில் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்சார இணைப்பு வழங்க முடியாததல் மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மீட்பு பணிகள் தீவிரம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், கடலோரப் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் 27 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பலி எண்ணிக்கை 33-ஆக உயர்வு

முன்எச்சரிக்கையாக குடியிருப்புகளில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். டோக்கியோவை சுற்றிலும் பல்வேறு நகரங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புயல் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது. 140 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 19 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் மோடி இரங்கல்

ஹகிபிஸ் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரை சமாளிக்க ஜப்பான் அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அங்கு இருக்கும் இந்திய கடற்படையினர், மீட்பு பணியில் உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் மோடி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>