ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: காங்கிரஸ் கட்சியினர் ரபேலை வரவேற்றிருக்க வேண்டும், மாறாக அதை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது பாகிஸ்தானை பலப்படுத்தும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் நடக்க உள்ள அரியானா சென்ற ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுவதாவது; ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது. ரபேல் விமானங்கள் மணிக்கு 2,130 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இயல்பாக 1,912 கிமீ வேகத்தில் பறக்கும். இதனால் எதிரிகளால் ஏவுகணைகளை வீசி தகர்ப்பது சிரமம். ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இதனால் ரபேல் இருந்திருந்தால் இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானத்தில் ஓம் என எழுதி ரக்ஷா பந்தன் கயிறை கட்டினேன். ஆனால், காங்., தலைவர்கள் இது குறித்து சர்ச்சை எழுப்பி வருகின்றனர். அவர்கள், ரபேல் விமானத்தை வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விமர்சிக்கின்றனர். காங்., தலைவர்கள் வெளியிடும் அறக்கைகள் பாகிஸ்தானை பலப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>