கலிபோர்னியாவில் தொடர்ந்து 6-வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ: தீயை அணைக்கும் பணியில் 14,000 தீயணைப்பு வீரர்கள்

கலிபோர்னியா: அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியதாக கூறப்படுகிறது. மேலும் மணிக்கு 800 ஏக்கர் காட்டுப் பகுதியை தீ சாம்பலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பலமான காற்று வீசி வருகிறது. இதனால் தீயை அணைக்கும் அவர்களுக்கு சவாலான ஒன்றாக இருந்து வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 7 ஆயிரத்து 542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரும் காட்டுத் தீயாகவும் இது பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 14,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயால், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மூடப்பட்டுள்ளது.

Related Stories: