ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுகின்றனர்: ஸ்டாலின்

சென்னை: ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். சிதைந்த நீட் தேர்வு முறையால், மருத்துவக் கல்வி பயில ஆர்வமுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், ஊழல் மற்றும் வரி ஏய்ப்புச் செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோத இலாபம் ஈட்டுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குத் தயாராக முடியும் என்பதை வருமானவரித் துறைச் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதோடு, நீட் தேர்வு, ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை, இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

Related Stories: