2 நாள் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு சென்னையில் இருந்து நேபாளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின் பிங்

சென்னை: முறைசாரா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஜி ஜின் பிங் தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். பின்னர் இரவு விருந்து முடிந்ததும், நேற்று இரவு 9.00 மணிக்கு மேல் சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார். பிரதமர் மோடி, காரில் கோவளம் புறப்பட்டு சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார்.

இதனையடுத்து இன்று இன்று காலை மோடி தங்கியிருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு கார் மூலம் சீன அதிபர் சென்றார்.  அ்ங்கு சென்ற ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஓட்டலில் கண்ணாடி அறையில் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பின் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பி்ன்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: