பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த 125வது ஆண்டு விழாவில் பென்னிகுக் சிலைக்கு மரியாதை: விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்பு

கூடலூர்:  பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 125வது ஆண்டு நாளையொட்டி, லோயர்கேம்ப் மணி மண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு பொதுமக்கள், விவசாயிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்.முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட 125வது ஆண்டை கொண்டாடும்விதமாக, நேற்று தேனி மாவட்டம், பெரியாறு அணை மீட்புக்குழு, விவசாய சங்கம், கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்கள்,  விவசாயிகள் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முல்லை பெரியாற்று நீரில் மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் கூடலூர் மக்கள் மன்ற செயலாளர் புதுராஜா, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் திலகர், பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார், முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜீவ் உட்பட  விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: