விஜய தசமி நாளில் அரசு பள்ளியில் உள்ள எல்கேஜி வகுப்பில் 2000 குழந்தைகள் சேர்ப்பு: கல்வித்துறை தகவல்

சென்னை: விஜயதசமி நாளில் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில்  2 ஆயிரம் குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் சுமார் 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 கோடியே 20 லட்்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயதசமி நாளில் நல்ல நேரம் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருவதும்  நீடிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி அரசு மாதிரிப் பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளன.

அதில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 32 அரசு மாதிரிப் பள்ளிகள், 2381 அங்கன்வாடிப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளில் 2131 குழந்தைகள்  புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: