சென்னை பல்லாவரத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் மோதல்: வைரல் வீடியோவால் பரபரப்பு

சென்னை: சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை  பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி என்ற சட்டம் பயிலகூடிய 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின்போது, அஸ்வின் என்ற மாணவரை சக மாணவர் கார்த்தி கணேஷ் பட்டா கத்தியால் தாக்கியுள்ளார். கை, தலை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்ட முயற்சிக்கும் போது, தலை, கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சக மாணவர்கள் தடுத்தப்பின்னரும் மோதல் நிலவிகொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த  நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவன்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் (நாளை) சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை  நடத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழக தலைநகரான சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில்  நடைபெறுகிறது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம்  வாய்ந்த பிரச்னைகள், தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மாணவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: