தமிழை கற்றுக் கொள்ள சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் : சீன ஊடகக்குழு தலைவர் கலைமகள் தமிழில் பேட்டி

சென்னை : சீனாவில் பெய்ஜிங், ஹாங்காங், ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் விரைவில் தமிழ் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நட்சத்திர விடுதியில் சீன ஊடகக் குழு மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சீனா, தமிழகம் இடையே கலைபறிமாற்றம் செய்து கொள்ள மத்திய அரசு உதவியோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கீழடியில் எடுக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்கள் ஒரு வாரத்தில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் காட்சிப்படுத்தப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். தொடர்ந்து சன் நியூஸுக்கு பேட்டி அளித்த சீன ஊடகக் குழு தலைவர் கலைமகள், சீனாவில் தமிழுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தமிழை கற்றுக் கொள்ள சீனர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். சீனாவின் 2 பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பை முன்னிட்டு சீன ஊடகக்குழு சென்னையில் முகாமிட்டுள்ளது. தமிழக ஊடகவியலாளர்கள் உடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சீன ஊடகக்குழு சார்பில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Related Stories: