மக்களே உஷார்... வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ : டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை : சென்னை மக்களுக்கு கண் நோய் வேகமாக பரவி, கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி வருகிறது. எனவே, கண்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மக்கள் சிலரின் கண்களில் எரிச்சல், நீர் வடிதல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கண் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. கண் எரிச்சல் காரணமாக அச்சமடைந்து மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கண்ணை சோதிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், சென்னையில் அடினோ வைரஸ் (மெட்ராஸ் ஐ) வேகமாக பரவி வருகிறது. இது ஒரு விதமான கண் நோய். இதனால் கண்கள் சிவப்பு நிறமாக மாறுகிறது.

கண் எரிச்சல், நீர் வடிதல், அழுக்கு தேங்குதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த வைரஸ் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து எளிதில் பரவி விடுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் கட்டுபடுத்துவது சிரமாக உள்ளது. எனவே மக்கள் கண்களை சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். சுத்தமான துண்டுகளை பயன்படுத்த வேண்டும், மற்றொருவர் பயன்படுத்திய துண்டுகளை, உபயோகிக்க கூடாது. படுக்கை துணிகளை மாற்றிவிட வேண்டும், கண் அலங்கார பொருட்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொள்ளாமல் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்படுத்திய கண் அலங்கார பொருட்களை தூக்கி வீசி விடுவது நல்லது.

Related Stories: