தகுதி மதிப்பெண்களை விட குறைவாக பெற்றவர்களுக்கு நர்ஸ் பணி நியமன உத்தரவு வழங்க கூடாது : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களை நிரப்பும் வகையில்,  மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில், செவிலியர் பணிக்கான தேர்வு கடந்த ஜூலை 23ம் தேதி நடந்தது. இத்தேர்வில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 64.50 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 64 மதிப்பெண்களும், பழங்குடியினர் 54 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்று தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘விதிமுறைகளுக்கு முரணாக மனுதாரரை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை தேர்வு ெசய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்கப்படுகிறது. தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் பதில் தரவேண்டும். வழக்கு வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: