மின் இணைப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதா? : மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சென்னை:மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்க வசூலிக்கப்பட்ட கட்டணம் பல மடங்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. இந்த மின் இணைப்பிற்கான கட்டண உயர்வு என்பது மக்களின் மீது பெரும் சுமையை ஏற்றி வைப்பது போல் உள்ளது. ஏற்கனவே, மத்திய பாஜ அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் தமிழகம் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுச் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை மூடப்பட்டு வரும் நிலையில் இந்த மின் இணைப்பிற்கான கட்டண உயர்வு வணிக நிறுவனங்களுக்கு அவர்கள் தாங்க இயலாத சுமையாகவே இருக்கும். னவே, தமிழக மக்கள் நலனுக்காக இந்த கட்டண உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: