பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார் : பூம் பூம் மாட்டுக்காரர்களை காக்க வேண்டும் எனக் கருத்து பதிவு

சென்னை : பூம் பூம் மாட்டுக்காரர்களை காக்க வேண்டும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு அமைந்துள்ள வீதியில் பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், வீட்டை விட்டு வெளியில் சென்று பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார்.பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றது குறித்து வாட்ஸ் அப் மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில், நீண்ட நாட்களுக்கு பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ள அவர்,மாட்டின் தலையசைப்பும் பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நமது பண்பாட்டு கூறுகளை பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் அதிகரித்துவிட்டதாக கவலை தெரிவித்துள்ள அவர், பூம் பூம் மாட்டுக்காரர்களை காப்பது நம்முடைய கடமை என அறிவுறுத்தி இருக்கிறார். தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் போல பூம் பூம் மாட்டுக்காரர்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். பூம் பூம் மாட்டுக்காரர்களை காப்பதும் ஒன்றுதான் நமது நாகரீகத்தை காப்பதும் ஒன்று தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பூம் பூம் மாட்டிடம் ஆசி வாங்கும் வீடியோ ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். 

Related Stories: