குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார் முன்னாள் பிரதமர் தேவே கவுடா..!

அகமதாபாத்: குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை முன்னாள் பிரதமர் தேவே கவுடா பார்வையிட்டார். ஒற்றுமையின் சிலை’ என்ற பெயரில் உலகத்திலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ளது.  இதற்கான அடிக்கல்லை மோடி கடந்த 2013ம் ஆண்டு நாட்டினார். சர்தார்  சரோவர் அணை அருகே, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 182 மீட்டர் உயரமுள்ள சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இதனிடையே இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமாகிய தேவே கவுடா குஜராத் மாநிலம் சென்றார். குஜராத் சென்ற அவர் சர்தார் சரோவர் நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: