எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் திடீர் அனுமதி: சிகிச்சைக்கு பின் மீண்டும் திகார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 14 நாட்கள் வீதம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜாமீன் கேட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த ஜாமீன் வழக்கு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறை உணவு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என சிதம்பரம் கூறியதால், அவருக்கு ஒருவேளை மட்டும் வீட்டு சாப்பாடு அளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  சிறையில் இருந்த ப.சிதம்பரம், தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக காவலர்களிடம் கூறினார். இதையடுத்து அவரை சிறை மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த சிறை டாக்டர், மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை செய்தார். இதன்படி, பலத்த பாதுகாப்புடன் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறைக் காவலர்கள் அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை தீவிரமாக பரிசோதித்தனர். அவருடைய வயிற்று வலிக்கு உரிய மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் அளித்தனர். இதையடுத்து, ப.சிதம்பரத்தை மீண்டும் திகார் சிறைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

‘பல்கலைக்கழகங்களுக்கு என்று கருத்து சுதந்திரம் கிடைக்கும்?’

சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், தன் குடும்பத்தினர் மூலம் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘காந்தியை பற்றிய ஐன்ஸ்டீன் கருத்து, இவரைப் போல் ஒரு மாமனிதர் பூமியில் வாழ்ந்து மறைந்தார் என்று அடுத்த தலைமுறை நம்புவது கடினம் என்ற கருத்துப்படி, மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழவேண்டும்’’ என்று ஐன்ஸ்டீன் சவாலை விடுப்பதாக கூறியிரு

ந்தார். இதை மேற்கோள் காட்டி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடியின் ஐன்ஸ்டீன் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதே நேரம், ஐன்ஸ்டீண் மற்றொரு பிரபல கருத்து, ‘‘கற்றுக் கொடுத்தலில் சுதந்திரம் வேண்டும். புத்தகம் மற்றும் பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம்தான் எந்தவொரு மக்களின் இயற்கையான மேம்பாட்டுக்கான பலமான அடிப்படையாக இருக்கும் என்பதாகும். இதன்படி,  நமது பல்கலைக்கழகங்கள் என்று உண்மையான கருத்து சுதந்திரத்தை பெறப்போகின்றன?’’ என்று கூறியுள்ளார்

Related Stories: