அரிச்சல்முனை கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்

ராமேஸ்வரம்: அரிச்சல்முனை கடலோர பகுதியில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல்துறை மற்றம் தேசிய பசுமைப்படை இயக்கத்தின் சார்பில் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

ராமேஸ்வரம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் முத்துக்குமார், பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி கோபிசங்கர் ஆகியோர் கடற்கரை தூய்மை குறித்து பேசினர். சுற்றுலா பயணிகள் மத்தியில் கடற்கரை தூய்மை குறித்தும், கடல் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நகராட்சி சுகாதார பணியாளர்கள்  கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் வேர்கோடு புனித ஜோசப்பள்ளி, ராமநாதபுரம் வேல்மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: