சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியல் முதல் 3 இடங்களை பிடித்தது ராஜஸ்தான்: புறநகரில் மகாராஷ்டிரா முதலிடம்

புதுடெல்லி: ரயில்வேயின் இந்த ஆண்டுக்கான சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ரயில் நிலையங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. ரயில்வேயில் கடந்த 2016ம் ஆண்டு முதல், 407 முக்கிய ரயில் நிலையங்களில் தூய்மை ஆய்வு நடத்தப்பட்டு சுத்தமான ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை ஆய்வில் இதன் எண்ணிக்கை 720 ரயில் நிலையங்களாக உயர்த்தப்பட்டதுடன், 109 புறநகர் ரயில் நிலையங்களும் முதன் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பசுமை நடவடிக்கை உள்ளிட்டவை இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டது.

 இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தூய்மை ஆய்வறிக்கையில், 720 முக்கிய ரயில் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரயில் நிலையங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. புறநகருக்கான 109 ரயில் நிலையங்களில் மகாராஷ்டிராவின் அந்தேரி, விரார், நைகான் முதல் மூன்று இடங்களில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியான தூய்மை ஆய்வில் வடமேற்கு ரயில்வே முதலிடத்தையும், அதனைத் தொடர்ந்து தென்கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே முறையே 2வது, 3வது இடத்தை பிடித்துள்ளன.

Related Stories: