புழல் நீர்பிடிப்பு பகுதியில் 53 ஏக்கர் தொழில் மண்டலமாக மாற்றம் : சிஎம்டிஏ அதிகாரி தகவல்

சென்னை: புழல் நீர்பிடிப்பு பகுதியில் 60 ஏக்கரை தொழில் மண்டலமாக மாற்று சிட்கோ அளித்த மனு தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே விரைவில் இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் 4500 ஏக்கர் பரந்து விரிந்துள்ள புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) 53 ஏக்கர் பரப்பளவில் தொழில் மண்டலம் அமைக்க முடிவு செய்தது.

இதற்காக நீர்நிலையாக உள்ள இந்த பகுதியை தொழில் பகுதி மறுவரையறை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் கடிதம் எழுதியது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அறவித்தது. இந்த கால அவகாம் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இது தொடர்பாக யாரும் எந்தவித கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை வழங்கவில்லை என்று சிஎம்சிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த பகுதியை மறுவரையறை செய்து தொழில் மண்டலாக அறிவிக்கும் பணியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: