அதிபர் பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல் : ஜனநாயக கட்சியினர் மீது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

வாஷிங்டன் : தம்மை அதிபர் பதவியை விட்டு நீக்க முயற்சி செய்வது வரலாற்று ஊழல் என்று ஜனநாயக கட்சியினை டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக விமர்சித்துள்ளார். முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி, உக்ரேன் அதிபரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்புகாரை அடுத்து அதிபர் ட்ரம்ப் பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி தொடங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், நம்மை நீக்க திட்டமிடும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்பொது நடப்பது அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல். ஜனநாயக கட்சியினர் உங்கள் துப்பாக்கிகளை எடுத்து செல்ல விரும்புகிறார்கள். உங்கள் சுகாதாரத்தையும் உங்கள் வாக்குகளையும், உங்கள் சுதந்திரத்தையும் பறிக்க நினைக்கிறார்கள். இதனை நடக்க அனுமதிக் கூடாது. நான் மக்களின் நலனுக்காக போராடுவதால், ஜனநாயக கட்சியினர் என்னை தடுக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்.  

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரேனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து டொனால்ட் ட்ரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி தொடங்கியுள்ளது.

Related Stories: