தென்காசி மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவில் தேர் பவனி

தென்காசி: தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 20ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் தினமும் மாலை பங்குத்தந்தையர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரையும், நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 21ம் தேதி ஒப்புரவு நிகழ்வும், 23ம் தேதி உணவு ஒன்றிப்பு விழாவும், 24ம் தேதி பல்சமய உரையாடல் மற்றும் கலைநிகழ்ச்சி, 25ம் தேதி கிறிஸ்தவ சபை ஒன்றிப்பு விழா நடந்தது.

27ம் தேதி காலை கும்பகோணம் அருளப்பன் தலைமையில் மறையுரை, பாட்டாக்குறிச்சி குருமடம் ஆண்டனி வர்க்கீஸ்ரோச்சா தலைமையில் மறையுரை, மலையாள திருப்பலி, மாலையில் மேலமெஞ்ஞானபுரம் பங்கு பணியாளர் குழந்தைராஜ் தலைமையில் பாளை ஆயர் இல்லம் லூர்துராஜ் மறையுரை நடந்தது. ஆவுடையானூர் பங்குப் பணியாளர் தேவராஜன் நற்கருணை கதிர்பாத்திரம் தலைமை வகித்தார். வல்லம் பங்கு பணியாளர் ஆரோக்கியராஜ் நற்கருணை ஆசீர், நற்கருணை பவனி நடந்தது. நேற்று மதியம் பாட்டாக்குறிச்சி குருமட அதிபர் ரினோய் கட்டிப்பரம்பில் தலைமையில் மறையுரை,

மாலை பாளை புனித சவேரியார் கலைமனைகள் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் மறையுரை நடந்தது. சென்னை உயர்படிப்பு தீபக்மைக்கேல்ராஜா தேரை அர்ச்சித்து தேர் பவனியை துவக்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவில் இன்று (29ம் தேதி) காலை கர்நாடகா குல்பர்க்கா மறைமாவட்டம் அந்தோணிசெல்வம் தலைமையில் புனே செல்வராஜ் மறையுரை, 5.45 மணிக்கு பாளை மறைமாவட்ட தொடர்பாளர் சேவியர்டெரன்ஸ் தலைமையில் மறையுரை, 7.30 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முன்னாள் மேயர் சின்னப்பா தலைமையில் மறையுரை,

9.30 மணிக்கு புனலூர் மறைமாவட்ட முதன்மை குரு வின்சென்ட் டிக்ருஸ் தலைமையில் கேரள திருப்பலி, 12 மணிக்கு தூத்துக்குடி ஜோசப் தலைமையில் குணமளிக்கும் நற்கருணை வழிபாட்டு திருப்பலி, மாலை 6 மணிக்கு மின்நகர் அமல்ராஜ், புளியங்குடி அருள்ராஜ் தலைமையில் மார்ட்டின் மறையுரை, நடத்துகின்றனர். 30ம் தேதி ஜோசப் தலைமையில் சுந்தர் மறையுரை நடத்தி கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை சகாயசின்னப்பன், உதவிபங்குதந்தை லூர்து மரியசுதன், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை, அன்பிய இறைசமூகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: