புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஜான்குமார் போட்டி: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்தவர்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக  ஜான்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளராக ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்தவர் இந்த ஜான்குமார். சட்டப்பேரவை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான் குமார் ஆவார். முதலமைச்சர் நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு எம்எல்ஏ பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோன்று புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளிக்கப்பட்டது, அதில் 10 பேர் விருப்பமனு அளித்தனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இறுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலையே இந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: