முதுகலை பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரிகள் சட்டமன்ற செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பம் : வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை அம்பலம்

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற செயலக துப்புரவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எம்.இ. மற்றும் எம்.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பு பட்டதாரிகளிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் 10 பெருக்குபவர், 4 துப்புரவுப் பணியாளர்கள் என்று மொத்தம் 14 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தொகுதி குறிப்பிடாமல் உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு விண்ணப்பித்தவர்களில் 677 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கல்வித் தகுதியே இல்லாத துப்புரவுப் பணியாளர் காலி பணியிடங்களுக்கு முதுகலை பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரிகள் விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்று வருகின்றன. கடந்த 23ம் தேதி முதல் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் என்ற அடிப்படையில் 40 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. துப்புரவு பணியாளர்களாக பணியாற்ற முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் பங்கேற்று இருப்பது தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை அம்பலமாகி இருப்பது தெரியவந்துள்ளது. 

Related Stories: