பசுமை தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்: அன்புமணி பங்கேற்பு

சென்னை: பசுமை தாயகம் சார்பில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க விழிப்புணர்வு பிரசாரத்தை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி துவக்கி வைத்தார். காலநிலை அவசரநிலை பிரகடனம் அறிவிக்க கோரி பசுமை தாயகம் சார்பில் சென்னை, கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் பிரசாரம் இயக்கம் நேற்று நடந்தது. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்பி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  மீனாட்சி கல்லூரி செயலாளர் லட்சுமி, பசுமை தாயகம் மாவட்ட தலைவர் கண்ணன்,  மாநில துணை செயலாளர் பொன்மலை, பசுமை தாயக செயலாளர் அருள் பங்கேற்றனர்.  இதில் மாணவிகள் கிளைமேட் ஆக்சன் நவ் என்ற எழுத்துக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆதரவு தெரிவித்தனர்.  

 பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உலகின் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்றும் ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கடமையாக எடுத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  மின்வாகனங்களை அதிகப்படுத்தி மின் பொதுபோக்குவரத்து, குப்பை கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், நீர்மேலாண்மை மற்றும் நகர்புற வளர்ச்சி திட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

Related Stories: