மத்தியப் பிரதேசத்தில் விஐபிக்களை மிரட்டிய பெண்களிடமிருந்து 4000 செக்ஸ் வீடியோக்கள் பறிமுதல்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் அந்தரங்கம் அடங்கிய 4000 செக்ஸ் வீடியோக்களை வைத்து அவர்களை பெண்கள் சிலர் பிளாக்மெயில் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பெண்களை உள்ளடக்கிய ஒரு கும்பல் வைத்திருந்த லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மூத்த அரசு அதிகாரிகள் முதல் இளநிலை இன்ஜினியர்கள் வரையும், முக்கிய பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பான செக்ஸ் வீடியோக்கள், அதிகாரிகளின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தோண்ட தோண்ட பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செக்ஸ் மோசடியாக இது கருதப்படுகிறது.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச ஏடிஜிபி சஞ்சீவ் சமி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், பாஜ தலைவர்களை குறிவைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது அந்த லேப்டாப்களில் இருந்து 4000க்கும் அதிகமான செக்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. இதில் பெண்கள் குழு இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட அரசியல்வாதி அல்லது அதிகாரிகளை செக்ஸ் ஆசைக்காட்டி அழைக்கும் பெண்கள், அவர்களுக்கு என தனியாக வாடகை அறைகளில் தங்கி அந்த நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவார்கள். அப்போது அங்கு மறைத்து வைத்திருக்கும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படும். அதைக் காட்டி அந்த பெண்கள் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளை பிளாக் மெயில் செய்து பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: