சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து அரக்கோணத்திற்கு 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாலை 5.10மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணத்திற்கு 25, 26ம் தேதிகளில் மதியம் 1.30க்கு செல்லும் ரயில் ஜோலார்பேட்டை முதல் லத்தேரி வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணத்தில் இருந்து 28ம்தேதி மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் ரயில் காட்பாடி அடுத்த சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.