முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போஷான் அபியான் என்ற திட்டத்தின் மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு உண்ண விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சுகாதாரத்தை மேம்படுத்துதல் கல்வி தரத்தை மேம்படுத்துதல் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக கண்காட்சி துவக்க நிகழ்ச்சி பள்ளிதலைமையாசிரியர் விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் தயார் செய்து வைத்திருந்த இயற்கை உணவு வகைகள் பற்றியும் அதன் பயனை பற்றியும், அணைத்து மாணவர்களும் ஊட்டச்சத்து உணவுகளை உண்ணுவது அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

இந்த கண்காட்சியில் மாணவர்களின் சொந்த முயற்சியில் தயார் செய்யப்பட்ட உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல் இயற்கை உணவுகளை தயார் செய்யும் தானியங்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் பட்டதாரி ஆசிரியை அருணா ராஜ, கணித பட்டதாரி ஆசிரியை நிர்மலா ஆகியோர் செய்திருந்தனர். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இயற்கை உணவுகளை சாப்பிட்டு அதன் பயன்பாடுகளை கேட்டறிந்து மகிழ்ந்தனர்.

மாணவர்கள் காட்சிப்படுத்த பட்டுள்ள உணவு பொருட்களின் நன்மைகள் குறித்து பார்வையிட்ட மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதில் பள்ளி நிர்வாகிகள் கிராம முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியினை அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இயற்கை உணவுகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Related Stories: