இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக். 22ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி

சென்னை: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22ம் தேதி நாடு தழுவிய ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர்  சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 40வது மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை அதாவது, ஆந்திரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, கனரா வங்கி  ஆகிய 10 வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக சுருக்க போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வங்கிகளை பெரும் வங்கிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. வங்கிகளை இணைப்பதனால் நாட்டுக்கோ, பொருளாதாரத்துக்கோ, வங்கி  துறைக்கோ, வங்கி வாடிக்கையாளருக்கோ எந்தவிதப்பயனும் ஏற்படாது. அதற்கு மாறாக வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றுவதால், பெரும் முதலாளிகளுக்கு கூடுதலாக கடன் கொடுக்கும் நிலை ஏற்படும். அதனால், வங்கிகள்  தன்மைக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

மேலை நாடுகளில் மிகப்ெபரிய வங்கிகள் பல மூடப்பட்டு பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலைமை நம்நாட்டு வங்கிகளுக்கும் வருவதை தவிர்க்க வேண்டும். வங்கிகளை இணைப்பதற்கு பதிலாக இன்னும் வங்கி  கிளைகள் இல்லாத நகரங்கள், கிராமங்களில் வங்கி கிளைகளை திறந்து மேலும் வாடிக்கையாளர்களுக்கான சேவையை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் வங்கிகளை இணைத்து 1000 வங்கி கிளைகளை மூடும் இந்த  செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

வங்கி துறையில் மிகப்பெரும் பிரச்னையாக வராக்கடன் உள்ளது. நிலுவையில் 10 லட்சம் கோடி அளவுக்கு வராக்கடன் உள்ளது. வங்கி இணைப்பு வராக்கடனை வசூலிக்க எந்த வகையிலும் உதவிக்கரமாக இருக்காது. மாறாக வங்கி  இணைப்பால் ஏற்படும் பிரச்னைகளை கவனிக்க வேண்டிய நேரத்தில், வராக்கடன் வசூலிக்கும் முயற்சிகள் கைவிடப்படும். ஏனவே, வங்கி இணைப்பு வராக்கடனை வசூலிக்க உதவாது. எனவே, இந்த  திட்டத்தை கைவிட வேண்டும். வங்கிகள்  இணைப்பை கண்டித்து அக்டோபர் 22ம் தேதி அனைத்து வங்கிகளை சார்ந்த ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வருகிற 26,27ம் தேதி வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் வங்கி ஊழியர்களும் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.வங்கிகளை இணைப்பதனால் நாட்டுக்கோ, பொருளாதாரத்துக்கோ, வங்கி துறைக்கோ, வங்கி வாடிக்கையாளருக்கோ எந்தவிதப்பயனும் ஏற்படாது. அதற்கு மாறாக வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றுவதால், பெரும்  முதலாளிகளுக்கு கூடுதலாக கடன் கொடுக்கும் நிலை ஏற்படும். அதனால், வங்கிகள் தன்மைக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

Related Stories: