கடாட்சபுரம்-அன்பின்நகரம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சிக்குள்பட்ட கடாட்சபுரத்தில் ஏராளமான மக்கள் இருந்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு வீடு மற்றும் தோட்டங்களுக்கு மின்விநியோகிக்கும் பொருட்டு உடன்குடி மின்வாரிய பராமரிப்பில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்படுகிறது. இதில் கடாட்சபுரத்தில் இருந்து அன்பின்நகரம் செல்லும் சாலையோரம் உயரழுத்த மின்சாரம் மின்கம்பங்கள் உள்ளன. அதில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து துருபிடித்த கம்பிகள் ெவளியே தெரியும் நிலையில் காணப்படுகிறது.

அப்பகுதியில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் கவனித்து அபாய மின்கம்பத்தை கல்தூண், மகம்பு கொண்டு தாங்கி பிடிக்குமாறு நிறுத்தி வைத்துள்ளனர். இதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இன்னும் அபாய மின்கம்பத்தை சீரமைக்கப்படவில்லையென கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து கடாட்சபுரம்-அன்பின்நகரம் சாலையோரம் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: