தீயணைப்பு துறையினர் ஆய்வும் நடத்துவதில்லை அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்வதில் அலட்சியம்: நிதி பற்றாக்குறை நீடிப்பதாக புகார்

வேலூர்: தமிழக அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக, போதிய நிதி ஒதுக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 56 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 50 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ற்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் விளையாட்டு நிகழ்ச்சியில் தீப்பந்தம் ஏந்தியபடி ஓடியபோது, திடீரென தீ உடலில் பற்றி எரிந்தது. இதில் மாணவர் பலியானார். விசாரணையில் உரிய தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருந்தது தெரிய வந்தது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என்றனர்.இதுதொடர்பாக தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்வது கட்டாயம். குறைந்தபட்சம் பக்கெட்டில் தண்ணீர், மணல் ஆகியவற்றை நிரப்பி வைத்திருக்க வேண்டும். 2 அடுக்குகளுக்கு மேல் கட்டிடம் இருந்தால், தீ விபத்து ஏற்படும்போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வகையில், பைப் லைன்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட அளவில் மாடி படிக்கட்டுகள் அகலம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கிறது. மேலும் பள்ளிகள் தொடங்குவதற்கு தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தீயணைப்புத்துறையில் அனுமதி பெற வேண்டும். அதன்படி, தனியார் பள்ளிகள் தீயணைப்புத்துறையில் லைசென்ஸ் வாங்கிவிடுகின்றனர்.தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், அரசு பள்ளிகளுக்கு தீயணைப்புத் துறையினரிடம் உரிய அனுமதி பெறப்படுகிறதா? உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்பதே தெரியவில்லை. தீயணைப்பு துறையினரும் அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்துவதில்லை. மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால், அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.

இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு அறிக்கை தயாரிக்க தீயணைப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது, நடத்திய விசாரணையில் அரசு பள்ளிகளில் தீயணைப்பு கருவிகளை புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

காற்றில் பறக்கும் உத்தரவுகள்

தமிழகத்தில் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தீயணைப்பு கருவிகள் புதுப்பிக்கப்படாமல் பழுதாகிவிட்டது. தற்போது, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான பள்ளிகளில் மட்டுமே தீயணைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பலமுறை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பொதுநல வழக்கு, விபத்து ஏற்பட்ட காலங்களில் அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

Related Stories: