கேரளாவில் பிரார்த்தனைக்கு சென்றபோது சர்ச்சில் 3 சிறுமிகள் பலாத்காரம் : பாதிரியாருக்கு போலீஸ் வலை

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், எர்ணாகுளம் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேரந்தவர்  ஜார்ஜ் (68).  அந்த பகுதியில் உள்ள கோவிலகம் புனித சிலுவை சர்ச்சில்  பாதிரியாராக  உள்ளார். கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள்  சர்ச்சில் பிரார்த்தனைக்காக சென்றுள்ளனர். 9 வயதான அந்த சிறுமிகளை  ஆசை வார்த்தைகூறி, பாதிரியார் தனது அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம்  செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுமி மட்டும் கடந்த 2 தினங்களுக்கு   முன்பு, பள்ளி ஆசிரியையிடம் கூறி உள்ளார்.   அதிர்ச்சி அடைந்த ஆசிரியை. சிறுமியின் பெற்றோர், எர்ணாகுளம் குழந்தைகள் நல  அமைப்பு ஆகியோரிடம் தெரிவித்தார்.

Advertising
Advertising

இது தொடர்பாக வடக்கேகரை காவல்  நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் 3 சிறுமிகளையும் பாதிரியார் ஜார்ஜ் பலாத்காரம்   செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து. போக்சோ பிரிவின் கீழ்  வழக்கு  பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார். அவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: