கிரைண்டர், சமையல் புளி ஓட்டலுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

பனாஜி: கிரைண்டருக்கு வரியை 5 சதவீதமாக குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. இதுபோல் உலர்ந்த புளிக்கு வரி விலக்கு அளித்துள்ளது.  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் 5, 12, 18,28 என நான்கு பிரிவுகளாக வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவரை பல்வேறு பொருட்களுக்கு வரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 37வது ஜிஎஸ்டி குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு.

Advertising
Advertising

* காபின் கலந்த பானங்களுக்கு வரி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் குளிர்பானங்களுக்கு, காம்போஷிசன் திட்டத்தில் இனி வரிச்சலுகை பெற முடியாது.

* ஓட்டல்களில் அறை வாடகை 7,500க்கு இருந்தால் 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  அறை வாடகை 1,001 முதல் 7,500 வரை 12 சதவீதம் வசூலிக்கப்படும், 1,000 வரையிலான அறை வாடகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* பூ, இலைகள் மற்றும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் கப், பிளேட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 5 சதவீதமாக இருந்தது.

* 10 முதல் 13 பேர் பயணிக்கக்கூடிய பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்கு இணக்க வரி 1 சதவீதமாகவும், டீசல் வாகனங்களுக்கு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த வரி 15 சதவீதமாக இருந்தது.

* கப்பல்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களுக்கு வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* நெய்யப்பட்ட மற்றும் நெய்யப்படாத பாலீதீன் பைகளுக்கு வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: