நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொலைகள் எதிரொலி; 7 காவல் ஆய்வாளர்கள், 40 காவலர்கள் பணியிடமாற்றம்

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதால் காவலர்கள், அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நெல்லை, தூத்துக்குடியில் 7 காவல் ஆய்வாளர்களும், 40 காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்ற புகார் பொதுமக்களிடையே எழுந்தது. இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஜிபி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடியில் பணியாற்றும் 40 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: